தமிழ்நாடு பிரிமியர் லீக் (TNPL) கிரிக்கெட் போட்டி ஜூன் 05-இல் ஆரம்பம்..!
Tamil Nadu Premier League cricket match starts on June 05
ஐ.பி.எல் போட்டியின் 18-வது சீசன் தற்போது நாட்டின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பரபரப்பான லீக் ஆட்டங்களில் பல முன்னணி அணிகள் தோல்விகளையும், சில அணிகள் இலகு வெற்றிகளையும் பெற்று கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அளித்து கொண்டிருக்கின்றன.
இந்நிலை இந்த ஐ.பி.எல் போட்டிகை நிறைவடைந்தவுடன், 09-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன்- ஜூலையில் நடைபெறவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.

அதில் 04 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய 08 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டி ஜூன் 05-ந்தேதி கோவையில் தொடங்கவுள்ளது.
முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கோவை கிங்சை சந்திக்கிறது. ஜூன் 06-ந்தேதி 02-வது லீக் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருப்பூர் தமிழன் அணியுடன் கோவை மைதானத்தில் மோதுகிறது. கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் நத்தம் ஆகிய 04 இடங்களில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகிறது. சாம்பியன் படத்துக்கான இறுதிப்போட்டி ஜூலை 06-ந்தேதி திண்டுக்கல்லில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Tamil Nadu Premier League cricket match starts on June 05