3வது நாளாக டெஸ்ட் போட்டியில் தாமதம்!...சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி, 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.  

சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது.

வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில்,  35 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் அடித்திருந்தபோது வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து நேற்று  2-வது நாள் ஆட்டம் நடைபெற இருந்த நிலையில், நேற்று  காலை முதல் கான்பூரில் மீண்டும் மழை பெய்ததால் 2வது நாள் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும்  ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் மழை காரணமாக இன்று 3 வது நாளில் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Test match delayed for 3rd day cricket fans in grief


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->