டெஸ்ட் போட்டி : வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி! - Seithipunal
Seithipunal


சென்னையில் கடந்த 19ம் தேதி தொடங்கிய இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற 4வது நாள் ஆட்டத்தில், இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத வங்காளதேச வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.
 ஷகிப் அல் ஹசன் 25 ரன், லிட்டன் தாஸ் 1 ரன், மெஹதி ஹசன் மிராஸ் 8 ரன் எடுத்து ஆட்டம் இழந்ததை தொடர்ந்து, கேப்டன் ஷாண்டோ 82 ரன்னில் அவுட் ஆனார்.

 இறுதியில் வங்காளதேச அணி 62.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 234 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 280 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Test match india beat bangladesh with a stunning victory


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->