காதலனால் தீவைத்து எரிக்கப்பட்ட ஒலிம்பிக் தடகள வீராங்கனை உயிரிழப்பு!
The death of the Olympic athlete who was set on fire by her boyfriend
உகாண்டா வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி, பாரீஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர ஓட்டபந்தயத்தில் 44-வது இடத்தைப் பிடித்தார்.
ரெபேக்கா செப்டேஜி, டிக்சன் எண்டிமா இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக, ரெபேக்கா, கவுண்டி என்ற பகுதியில் பல தடகளப்பயிற்சி மையங்களுக்கு அருகே இருக்கும் வகையில் நிலம் ஒன்றை வாங்கியுள்ளார்.
இதனால், ரெபேக்காவிற்கும் அவரது காதலருக்கும்இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினை பெரிதான நிலையில், கடந்த 1-ம் தேதி, பெட்ரோல் வாங்கி வந்த டிக்சன், ரெபேக்காவின் மீது ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால், ரெபேக்காவிற்கு தீக்காயங்கள் ஏற்பட்டன.
மேலும், காதலன் டிக்சனுக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் எல்டோரெட் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இந்த சூழலில் 75 சதவீத தீக்காயங்கள் ரெக்காவிற்கு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த ரெபேக்கா செப்டேஜி, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தாக உகாண்டா தடகள கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
The death of the Olympic athlete who was set on fire by her boyfriend