இங்கிலாந்து அணி இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்தில் இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிகொண்டு வருகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி  427 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் மற்றும் கஸ் அட்கின்சன் சதமடித்தனர். இதனையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 196 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதன் பின்னர் 231 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 251 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 103 ரன்கள் குவித்தார்.

மேலும், 483 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியால் வெறும் 292 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இலங்கையில் அதிகபட்சமாக தினேஷ் சண்டிமால் 58 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகளை குவித்தார். இவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The England team defeated the Sri Lankan team and won


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->