இரண்டாவது இன்னிங்சிலும் சொதப்பிய இந்திய அணி.. ஆஸ்திரேலிய அணிக்கு 162 ரன்கள் இலக்கு!
The Indian team lost the second innings Australia set a target of 162 runs
சிட்னியில் நடந்துவரும் 5-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி இரண்டாவது இன்னிங்சில் 39.5 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.முதல் இன்னிங்சில் சொதப்பியதைப்போல இரண்டாவது இன்னிங்சில் மீண்டும் இந்திய அணி சொதப்பியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வென்றது .இதையடுத்து நடந்த இரண்டாவது போட்டியில் பகல்-இரவு டெஸ்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. 3-வது டெஸ்ட் மழையால் 'டிரா' ஆன நிலையில் மெல்போர்னில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தநிலையில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பண்ட் 40 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலியா தரப்பில் போலன்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 181 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 57 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் கிருஷ்ணா மற்றும் சிராஜ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.
பின்னர் 4 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்கம் நன்றாக இருந்தாலும் கே.எல். ராகுல் 13 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 22 ரன்களிலும் போலன்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
2-வது நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அப்போது இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இறுதியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 39.5 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் சொதப்பியதைப்போல இரண்டாவது இன்னிங்சில் மீண்டும் இந்திய அணி சொதப்பியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் அபாரமாக பந்துவீசிய போலந்து, 6 விக்கெட்டுகளை எடுத்தார் . இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
English Summary
The Indian team lost the second innings Australia set a target of 162 runs