ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதை வென்ற டிராவிஸ் ஹெட் மற்றும் அன்னாபெல் சதர்லேண்ட்..!
Travis Head won the Australian Cricketer of the Year award
ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை டிராவிஸ் ஹெட் பெற்றுள்ளார்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா சார்பில், சர்வதேச அரங்கில் சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்படுகிறது. அதன் படி சிறந்த வீரருக்கான 'ஆலன் பார்டர்' பதக்கத்தை டிராவிஸ் ஹெட் வென்றுள்ளார்.
இதற்கான ஓட்டெடுப்பில் ஹேசல்வுட் (158 வாக்கு), கம்மின்ஸ் (147) வாக்கு பெற்றனர். இதிலும் ஹெட் (208) வாக்குகள் பெற்றுள்ளார்.
சி.ஏ., நிர்ணயித்த காலகட்டத்தில் மூன்று வித போட்டியிலும் சேர்த்து டிராவிஸ் ஹெட் 1427 ரன் எடுத்துள்ளார். இந்நிலையில் இவ்விருதினை வென்ற 15வது ஆஸ்திரேலிய வீரரானார் ஹெட் தேர்வாகியுள்ளார்.
அத்துடன், சிறந்த ஒருநாள் போட்டி வீரருக்கான விருதையும் ஹெட் வென்றுள்ளார். சிறந்த டெஸ்ட், 'டி-20' போட்டி வீரருக்கான விருதுகளை முறையே ஹேசல்வுட், ஆடம் ஜாம்பா ஆகியோர் பெற்றுள்ளனர்.
சிறந்த வீராங்கனைக்கான 'பெலிண்டா கிளார்க்' பதக்கத்தை அன்னாபெல் சதர்லேண்ட் வென்றுள்ளார். இவர் மொத்தம் 168 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை தொடர்ந்து, ஆஷ்லே கார்ட்னர் (143), பெத் மூனேவை (115) பின் தள்ளியுள்ளனர். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் (2024, பிப்ரவரி 15-17) இரட்டை சதம் (210) விளாசிய அன்னாபெல், சமீபத்தில் மெல்போர்னில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் பகலிரவு டெஸ்டில் 163 ரன்கள் எடுத்தார்.
மேலும், சிறந்த ஒருநாள் போட்டி வீராங்கனை விருதை ஆஷ்லே கார்ட்னர் கைப்பற்றியுள்ளார். சிறந்த 'டி-20' போட்டி வீராங்கனை விருதை பெத் மூனே பெற்றுள்ளார்.
English Summary
Travis Head won the Australian Cricketer of the Year award