பயிற்சி ஆட்டத்தில் களமிறங்க போகும் இரண்டு இளம் வீரர்கள்! - Seithipunal
Seithipunal


ஒரு இடது கை பந்து வீச்சாளர் கொண்ட இந்திய அணி!

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணையில் இலக்கை பந்துவீச்சாளராக அர்ஷ்தீப் சிங் மட்டுமே இடம்பெற்றுள்ளார். மற்ற அணிகளை பொருத்தவரை ஒன்றுக்கு மேற்பட்ட இடக்கை பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளது. ஆனால் இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங்கிற்கு மாற்றாக யாரும் இடம்பெறவில்லை. 

இந்த நிலையில் மகாராஷ்டிராவின் முகேஷ் சௌத்ரி மற்றும் சவுராஷ்டிராவின் சேத்தன் சகாரியா ஆகியோர் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பைக்கான வலை பயிற்சி பந்துவீச்சாளர்களாக அணியில் இணைந்துள்ளனர். முகேஷ் மற்றும் சேத்தன் ஆகியோர் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் அணியுடன் சென்றுள்ளனர். 

 இந்தியா அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில்  விளையாட உள்ளது. இந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் முகேஷ் மற்றும் சேத்தன் ஆகியோர் இடம்பெறுவார்கள் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு இடம் பெறும் பட்சத்தில் இக்கட்டான சூழ்நிலையில் அர்ஷ்தீப் சிங்கிற்கு மாற்று பந்துவீச்சாளர்களாக களம் இறக்கப்படலாம் என நம்பப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two indian young lef arm bowlers going to play in the training game


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->