பாதி மாரத்தான் போட்டி: உகாண்டாவின் வீரர் உலக சாதனை..!
Ugandan athlete Jacob Kiblimo world record in the half marathon
பாதி மாரத்தான் ஓட்டத்தில் உகாண்டாவின் ஜேக்கப் கிப்லிமோ உலக சாதனை படைத்துள்ளார். ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற பாதி மாரத்தான் ஓட்ட போட்டியில் உகாண்டா வீரர் ஜேக்கப் கிப்லிமோ பங்கேற்றார். அவர் இலக்கை 56 நிமிடம், 41 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஸ்பெயினின் வாலன்சியா நகரில் நடந்த போட்டியில் எத்தியோப்பியாவின் யோமிப் கெஜெல்சா, பந்தய துாரத்தை 57 நிமிடம், 30 வினாடியில் கடந்த சாதனை படைத்திருந்தார். அவரது சாதனையை ஜேக்கப் கிப்லிமோ முறியடித்துள்ளார்.

உகாண்டாவை சேர்ந்த கிப்லிமோ, டோக்கியோ ஒலிம்பிக் (2021), உலக சாம்பியன்ஷிப் (2022) 10,000 மீ., ஓட்டத்தில் கிப்லிமோ வெண்கலம் வென்றிருந்தார். இது தவிர இவர், பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டில் (2022) 5000, 10000 மீ., ஓட்டத்தில் தலா ஒரு தங்கம் கைப்பற்றினார்.
உலக பாதி மாரத்தான் ஓட்டத்திலும் (2020) ஒரு தங்கம் (தனிநபர்), ஒரு வெண்கலம் (அணி) வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Ugandan athlete Jacob Kiblimo world record in the half marathon