தாயகம் வந்தடைந்த வினேஷ் போகத் : டெல்லியில் உற்சாக வரவேற்பு......நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி! - Seithipunal
Seithipunal


பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  33-வது ஒலிம்பிக் போட்டிகள்  நடைபெற்றது. இதில் 
பெண்கள் மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

எடை அதிகரித்ததால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் கைவிரித்துவிட்ட நிலையில், வெள்ளிப் பதக்கம் வழங்கக்கோரி  வினேஷ் அளித்த மனுவையும், விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே ஸ்விஸ் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்வதே பதக்கம் பெறுவதற்காக அடுத்து உள்ள ஒரே வழி என்று இந்திய ஒலிம்பிக் சங்க வக்கீல் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் பதக்கம் நிராகரிக்கப்பட்ட பின் வினேஷ் போகத் முதல் முறையாக, தன் கைகளால் கண்களை மூடிக்கொண்டு கீழே படுத்திருந்த புகைப்படத்தை நேற்று வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், பாரீசில் இருந்து வினேஷ் இன்று தாயகம் திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்த அவருக்கு மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி என்றும்,  நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.என தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vinesh Phogat on his return to his homeland A warolymopim welcome in Delhi Thank you to all the people of the country


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->