பயிற்சி ஆட்டத்தில் சுவரை உடைத்த விராட் கோலி! ஸ்கெட்ச் போட்டு குடுத்த கம்பீர்! - Seithipunal
Seithipunal


வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் சென்னை வந்தனர்.

இந்திய அணி வீரர்கள்  இந்த தொடரில் வெற்றை பெறவும் பாம்பு டான்ஸ் குரூப்பை ஓடவிடவும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்!அதிலும் கிங் கோலி நேற்று சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சி செய்துகொண்டே இருக்கும்போது விராட் கோலி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பந்துகளை நாலா புரமும் பறக்கடித்தார்.

இதனையும் படிக்க : https://www.seithipunal.com/cinema/actor-siddharth-actress-aditi-rao-wedding

அந்த நேரத்தில் விராட்கோலி ஒரு அதிரடி சிக்சரை அடிக்க பந்து நேராக சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள சுவரை பதம்பார்த்தது. சுவரில் ஓட்டை விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

பயிற்சி ஆட்டத்தை  முன்னாள் இந்திய வீரர் கெளதம் கம்பீர் மேற்பார்வையிட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இடது கை ஸ்பின்னர்களுக்கு எதிரான தடுமாற்றத்தை சரி செய்ய கோலிக்கு கம்பீர் முக்கிய ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனையும் படிக்க : https://www.seithipunal.com/politics/ntk-idumbavanam-karthik-condemn-to-vck-tirumalavan

இந்த தொடரில், விராட் கோலி பெரிய சாதனைகளை நோக்கி செல்கிறார். முதல் போட்டியில் 58 ரன்கள் அடித்தால், சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்கள் குவித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை அவர் படைக்கும். மேலும், வங்கதேச தொடரில் 152 ரன்கள் சேர்த்தால், 9000 டெஸ்ட் ரன்களை கடந்த இந்திய வீரர்களில் 4வது இடத்தைப் பெறுவார் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virat Kohli broke the wall in the practice game


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->