இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்.. விராட் கோலி 3 சதங்கள் வரை விளாசுவார் - கபில்தேவ் கணிப்பு.!
Virat Kohli hit 2,3 century in border Gavaskar trophy Kapil Dev
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில், முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் விராட் கோலி 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். விராட் கோஹ்லி தொடக்கத்திலேயே தனது விக்கெட்டை இழந்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் விராட் கோஹ்லி குறித்து கருத்து கணிப்பு தெரிவித்துள்ளார். அந்த வகையில் 2வது டெஸ்டில் கோஹ்லியின் பழைய ஆட்டத்தை பார்க்கலாம். மேலும், தொடரின் முடிவில் விராட் கோலியால் 2 முதல் சதங்கள் அடிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Virat Kohli hit 2,3 century in border Gavaskar trophy Kapil Dev