இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா தலைமையிலான அணியும், டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டெஸ்ட் அணியில் சீனியர் வீரரான புஜாரா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், டி20 தொடருக்கு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களைக் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 12-ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (து.கே), கேஎஸ் பாரத் (வி.கீ), இஷான் கிஷான் (வி.கீ), ஆர்.அஷ்வின், ஆர்.ஜடேஜா, ஷர்துல் தாகூர், அக்சர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட், நவ்தீப் சைனி.

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி

கிரெய்க் பிராத்வைட் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட் (து.கே), அலிக் அதானாஸ், டேகனரைன் சந்தர்பால், ரஹ்கீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கிர்க் மெக்கென்சி, ரேமன் ரெய்ஃபர், கெமர் ரோச், ஜோமெல் வாரிக்கன்.

பயண காத்திருப்பு : டெவின் இம்லாச், அகீம் ஜோர்டான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Indies announce squad for against India 1St test match


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->