இந்திய தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

அதாவது, மூன்று ஒருநாள் போட்டிகளும் ( 6,9,11 தேதிகளில்) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திலும், மூன்று டி20 போட்டிகள் (16,18,20 தேதிகளில்) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்திலும் நடைபெறுகின்றன.  மேலும், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி ; கைரன் பொல்லார்ட் (கே), ஃபேபியன் ஆலன், நக்ருமா பொன்னர், டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அக்கேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், நிக்கோலஸ் பூரன், கேமர் ரோச், ரொமாரியோ ஷெப்பர்ட், ஒடியன் ஸ்மித், ஹேடன் வால்ஷ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Indies tour of India series West Indies team squad


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->