வின்ஸ்டன் ஓபன் டென்னிஸ் : அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் சுரேஷ் ஜோடி!
Winston Open Tennis Indias Suresh pair advanced to the semi finals
அமெரிக்காவில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவை சேர்ந்த சுரேஷ் இணை 10-8 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள வட கரோலினா மாகாணத்தில் வின்ஸ்டன் சலேம் ஓபன் டென்னிஸ் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் தட்சிணேஸ்வர் சுரேஷ் - பிரிட்டனின் லூகா பவ் இணையும், உருகுவே நாட்டை சேர்ந்த ஏரியல் பெஹா - அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த ஆண்ட்ரேஸ் மோல்டெனி இணையுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட சுரேஷ் இணை 10-8 என்ற புள்ளிக்கணக்கில் ஏரியல் பெஹா இணையை வீழ்த்தியது. இதன் மூலம் சுரேஷ் இணை காலிறுதிக்கு முன்னேறியது.
தொடர்ந்து, இந்தியாவின் தக்சினேஷ்வர் சுரேஷ் - பிரிட்டனின் லூகா பவ் இணை, ஈகுவடாரின் கோன்சாலோ எஸ்கோபார் - கஜகஸ்தானின் அலெக்சாண்டர் நெடோவியோவ் இணை உடன் மோதியது. இதில், 10-8 என்ற புள்ளிக்கணக்கில் அலெக்சாண்டர் நெடோவியோவ் இணையை வீழ்த்தி, தக்சினேஷ்வர் சுரேஷ் - லூகா பவ் இணை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
English Summary
Winston Open Tennis Indias Suresh pair advanced to the semi finals