அசாத்திய சாதனையை நிகழ்த்திய குல்தீப் யாதவ்!
WIvIND Kuldeep Yadav
வெஸ்ட் இண்டீஸ்- இந்திய அணிகளுக்கு இடையின மூன்றாவது டி 20 ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்க் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், வெஸ்ட் இண்டீஸ்அணி 5 விக்கெட்டு இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் 42 ரன்னும், ரோவ்மென் பாவெல் 19 பந்தில் 40 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை குல்தீப் யாதவ் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதி வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதுவரை 30 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள குல்தீப் யாதவ் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்த பட்டியலில் சஹல் 34 போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்தி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதி வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில், இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் (26 போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் குல்தீப் யாதவ் மற்றும் ஹசரங்கா (30 போட்டிகள்) உள்ளனர்.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ஒரு ரன்னிலும், தட்டு தடுமாறி ஆடிய ஷுப்மன் கில் 6 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினார்.
இதனை தொடர்ந்து 44 பந்தில் 4 சிக்சர், 10 பவுண்டரிகள் உள்பட 83 ரன்கள் குவித்து சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார்.
17.5 ஓவர்களில், 3 விக்கெட்களை மற்றும் இழந்து இந்திய அணி 164 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பதிவு செய்தது.