ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி.. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைப்பெற்று வருகிறது. ஐக்கிய அமீரகம், மலேசியா, தாய்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, வங்கதேசம் ஆகிய ஏழு அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன.

இந்த நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு நடைபெறும் 13வது லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், 3 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

இதுவரை நேருக்கு நேர்

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 12 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 10 போட்டிகளில் இந்திய அணியு, 2 போட்டிகளில் பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய பெண்கள் அணி: 

ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, சப்பினேனி மேகனா, ரிச்சா கோஷ்(வி.கீ), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர்(கே), தயாளன் ஹேமலதா, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ரகர், சினே ராணா, ரேணுகா சிங், கிரண் நவ்கிரே, ராதா யாதவ், மேக்னா யாதவ்  சிங், ராஜேஸ்வரி கயக்வாட்

 பாகிஸ்தான் பெண்கள் அணி: 

முனீபா அலி(w), சித்ரா அமீன், பிஸ்மா மரூஃப்(c), நிதா தார், ஆயிஷா நசீம், அலியா ரியாஸ், ஒமைமா சொஹைல், கைனத் இம்தியாஸ், டயானா பைக், துபா ஹாசன், நஷ்ரா சந்து, சித்ரா நவாஸ், அய்மன் அன்வர், சாடியா  இக்பால், சதாப் ஷமாஸ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women Asia Cup INDW vs PAKW


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->