மகளிர் டி20 உலகக்கோப்பை.. அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி.!
Womens T20 World Cup 2023 India qualified semifinal
8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி 10ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலக்கோப்பையில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெற உள்ளது.
அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. அதேபோல் 'பி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதில், இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானையும், 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தி 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இதில், நேற்று முன்தினம் நடைபெற்ற 3வது லீக் போட்டியில் இங்கிலாந்து அணி இடம் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் இன்று அயர்லாந்து அணியுடன் மோதுகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தது.
இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதி செல்வது உறுதியாகிவிடும். ஒருவேளை தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் அணியை அருகில் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தானா 87 ரன்கள் குவித்தார்.
அதனைத் தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து மகளிர் அணி 8.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. அதன் பின்னர் 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில் மழை நிற்காததால் டிஎல்எஸ் விதிமுறைப்படி இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் குரூப் 'பி' இங்கிலாந்து இந்தியா அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
English Summary
Womens T20 World Cup 2023 India qualified semifinal