#WT20 WORLD CUP : கடைசி வரை போராடிய இந்தியா தோல்வி.. ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி.!
Womens T20 World Cup australia won by 5 runs against India in semifinal
மகளிர் டி20 உலக கோப்பையில் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியை தோற்கடித்து ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி 10ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலக்கோப்பையில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெற உள்ளது.
அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. அதேபோல் 'பி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் தற்போது லீக் சுற்று போட்டிகளின் முடிவில் 'ஏ' பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகளும், அதேபோல் 'பி' பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இங்கிலாந்து, இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்று முதல் அரையிறுதி போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்படி இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். அதற்கேற்ப இந்திய வீராங்கனைகளும் பீல்டிங்கில் நிறைய தவறுகளை செய்தனர். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் கடைசி வரை போராடி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்திய சிறப்பாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 43 ரன்களும், ஹார்மன்ப்ரித் கவுர் 52 ரன்களும் எடுத்தனர்.
English Summary
Womens T20 World Cup australia won by 5 runs against India in semifinal