மகளிர் டி20 உலகக் கோப்பை.. பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.! - Seithipunal
Seithipunal


8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி நேற்று முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலக்கோப்பையில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெற உள்ளது.

அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. அதேபோல் 'பி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

இதில், இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் இன்று பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணியில் அதிரடி தொடக்க வீராங்கனையான  ஸ்மிருதி மந்தானா காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாட வில்லை, அவருக்கு பதிலாக யாஷ்டிகா பாடியா விளையாடுகிறார்.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடிய பிஸ்மா மகரூப் 68 ரன்களும், ஆயிஷா நசீம் 25 பந்துகளில் 43 ரன்களும் எடுத்தனர். 

அதனைத் தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய ஜெமிமா ரோட்டரிக்ஸ் 38 பந்துகளில் 53 ரன்களும், ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens T20 World Cup India won by 7 wickets against Pakistan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->