வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி.. இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்.!
Womens T20 World Cup South Africa beat England and reach final
மகளிர் டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணியை உயர்த்தி தென்னாபிரிக்க அணி முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி 10ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலக்கோப்பையில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெற உள்ளது.
அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. அதேபோல் 'பி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் தற்போது லீக் சுற்று போட்டிகளின் முடிவில் 'ஏ' பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகளும், அதேபோல் 'பி' பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இங்கிலாந்து, இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.
அதனைத் தொடர்ந்து அரையிறுதி போட்டிகயில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி முதன்முறையாக உலக கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி நாளை (பிப்ரவரி 26 ஆம் தேதி) மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.
English Summary
Womens T20 World Cup South Africa beat England and reach final