மகளிர் டி20 உலகக்கோப்பை.. இந்திய அணி அபார பந்துவீச்சு.. எளிய இலக்கை எட்டுமா?
Womens T20 World Cup West Indies target of 119 runs against India
மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 119 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி 10ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலக்கோப்பையில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெற உள்ளது.
அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. அதேபோல் 'பி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி தனது 2வது லீக் போட்டியில் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதுகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியில் மாற்றம்
இந்திய அணியில் கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடதா ஸ்மிருதி மந்தானா விளையாடுகிறார்.
இந்திய அணிக்கு 119 ரன்கள் இலக்கு
அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய தீப்தி ஷர்மா 3 விக்கெட் வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
English Summary
Womens T20 World Cup West Indies target of 119 runs against India