பெண்கள் டி20 உலகக்கோப்பை : 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி! - Seithipunal
Seithipunal


9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.

10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் திருவிழா வரும் 20-ம் தேதி வரை  நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில்,  வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின .

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹீலே மேத்யூஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது . பின்னர்  வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது . வங்காளதேச அணியில் நிகர் சுல்தானா 39 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கரிஷ்மா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார் .

104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது . தொடர்ந்து  12.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens t20 world cup west Indies won by 8 wickets


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->