மகளிர் டி20 உலக கோப்பையை.. தென் ஆப்ரிக்கா அணிக்கு 156 ரன்கள் இலக்கு.. கோப்பை யாருக்கு.? - Seithipunal
Seithipunal


மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி 10ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலக்கோப்பையில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெற உள்ளது.

அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. அதேபோல் 'பி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் 'ஏ' பிரிவில் முதல் 2  இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகளும், அதேபோல் 'பி' பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இங்கிலாந்து, இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து அரையிறுதி போட்டிகயில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக விளையாடிய பெத் மூனே 53 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார்.

அதனைத் தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா அணி களமிறங்க உள்ளது. சொந்த மண்ணில் விளையாடும் தென் ஆப்ரிக்கா அணி முதன் முறையாக உலக்கோப்பையை கைப்பற்றுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens T20 World final australia target of 157 runs against South Africa


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->