முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை!! அதுவும் சும்மா இல்ல சார்!! - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றில் நெதர்லாந்து அணி இலங்கை அணியை இன்று எதிர்கொண்டது. இலங்கை அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில் வலுவான தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய நெதர்லாந்து அணியை இலங்கையால் விழித்த முடியாது என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  இதனை அடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணியின் வீரர்கள் தொடர்ந்து சொன்னப்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். 

இந்நிலையில் 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சைப்ரன்ட் 70 ரன்களும், லோகன் வான் 59 ரன்களும் குவிக்க 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நெதர்லாந்து அணி 262 ரன்களை சேர்த்தது. 

இதனை அடுத்து 263 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணியின் துவக்க வீரர் குசால் பெரேரா 5 ரன்களிலும், அடுத்து களம் இறங்கிய குசால் மெண்டிஸ் 11 ரன்களிலும் ஆட்டம் இழந்து வெளியேற மற்றொரு துவக்க வீரராக களம் இறங்கிய பதும் மிசங்கா 54 ரன்களை குவித்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அசலங்கா 44 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க 33 வது ஓவரில் 181 ரன்கள் குவித்த இலங்கை அணி வெற்றி பெற 82 எங்கள் தேவைப்பட்டபோது நெதர்லாந்து அணி வீசிய பந்துவீச்சில் எடுக்க முடியாமல் சமர விக்ரமா தடுமாறினார்.

இதனால் கடைசி ஓவர் வரை இந்த போட்டியை எடுத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனஞ்செயா டி சில்வா 46வது ஓவரில் 2 சிக்ஸர் அடித்து அணியின் அழுத்தத்தை குறைத்தார். எனினும் அவர் அடுத்த ஓவரிலேயே ஆட்டம் இழந்த நிலையிலும் கடைசிவரை நின்று அடிய சமர விக்கிரமா 48.2 ஓவரில் அணியின் வெற்றியை உறுதி செய்து ஆட்டம் இழக்காமல் 91 ரகளை சேர்த்தார். இதன் மூலம் இலங்கை அணி போராடி தனது முதல் வெற்றியை பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World cup 2023 Sri Lanka beaten Netherland


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->