இந்திய கிரிக்கெட் அணி இனி ஆக்ரோஷமாக இருக்கும் - பயிற்சியாளராக காம்பீர் வருகை குறித்து சில முன்னாள் வீரர்கள் கருத்து..! - Seithipunal
Seithipunal



இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பீர் நியமிக்கப் பட்டுள்ளார். இதுகுறித்து உலக அணிகளின் முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட் சமீபத்தில் நடந்து முடிந்த T 20 உலகக் கோப்பைத் தொடருடன் விடைபெற்றார். இவரது தலைமையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதுகுறித்து உலக அணிகளின் முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

டேல் ஸ்டெயின் : தென்னாபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவர், "சிறந்த இந்திய வீரர்களில் ஒருவரான கவுதம் காம்பீர், தற்போது முன்னை விட ஆக்ரோஷமாக திரும்பி வந்துள்ளார். அவரது அந்த ஆக்ரோஷம் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவரின் தீவிர ரசிகன்".

ஜாக் காலிஸ் : உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டரான இவர், "கவுதம் காம்பீர் பயிற்சியாளராக வருவதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எப்போதும் ஆக்ரோஷமாக களத்தில் நிற்கும் அவர், இனி வரும் காலங்களில் இந்தியா பல தொடாத உயரங்களை எல்லாம் தொட வைப்பார்".  

ஷாகித் அப்ரிடி : பாகிஸ்தான் வீரரான இவர், காம்பீர் மிகவும் நேர்மையானவராக இருக்கிறார். களத்தில் பயிற்சியாளராக அவர் எப்படி செயல்படுகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Teams Former Cricket Players Speaks About Gautam Gambhir As Indian Coach


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->