மகளிர் ஐபிஎல்.. பெங்களூரை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி.. பெங்களூர் அணிக்கு 5வது தோல்வி.!
WPL Delhi capitals won by 6 wickets against banglore
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்த நிலையில் இன்று இரவு நடைபெற்று வரும் 10வது லீக் போட்டியில் பெங்களூர் - டெல்லி அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. பெங்களூர் அணியில் சிறப்பாக விளையாடிய எலீஸ் பெர்ரி 62 ரன்கள் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிதானமாக விளையாடி ரன் குவித்தது. இதில் டெல்லி அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் 4 பந்துகளிலே அடித்து திரில் வெற்றி பெற்றது.
இறுதியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 5 லீக் போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதால் இந்த சீசனில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளது.
English Summary
WPL Delhi capitals won by 6 wickets against banglore