மகளிர் ஐபிஎல்.. முதல் வெற்றியை பதிவு செய்யுமா பெங்களூரு அணி?.. டெல்லி பௌலிங் தேர்வு.!
WPL Delhi capitals won the toss choose to bowl against Bangalore
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல் அணி பௌலிங் தேர்வு செய்துள்ளது.
முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்த நிலையில் இன்று இரவு நடைபெறும் 10வது லீக் போட்டியில் பெங்களூர் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
பெங்களூர் அணி இதுவரை விளையாடிய 4 லீக் போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதால் இந்த சீசனில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளது. மேலும் மீதமுள்ள 4 போட்டிகளிலும் பெங்களூர் அணி வெற்றி பெற்றால் மட்டுமே நாக் அவுட் போட்டிகளுக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு டெல்லி பெங்களூர் அணிகள் மோதிய 2வது லீக் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது பெங்களூர் அணி முதல் வெற்றியை பதிவு செய்து பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அணி விவரம்
பெங்களூர் மகளிர் அணி :
ஸ்மிருதி மந்தனா (கே), சோஃபி டிவைன், எலிஸ் பெர்ரி, ஹீதர் நைட், ரிச்சா கோஷ் (வி.கீ), ஷ்ரேயங்கா பாட்டீல், திஷா கசட், மேகன் ஷட், ஆஷா ஷோபனா, ரேணுகா தாக்கூர் சிங், ப்ரீத்தி போஸ்
டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி :
மெக் லானிங் (கே), ஷஃபாலி வர்மா, ஆலிஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான் கேப், டானியா பாட்டியா (வி.கீ), ஜெஸ் ஜோனாசென், அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், ஷிகா பாண்டே, தாரா நோரிஸ்
English Summary
WPL Delhi capitals won the toss choose to bowl against Bangalore