டபிள்யூபிஎல் | ஆட்டக்களத்திலேயே சுருண்டு விழுந்த குஜராத் கேப்டன்! 24 ரன்னுக்கு 7 விக்கெட்!
WPL MI vs Gu beth mooney injury
டபிள்யூபிஎல் (பெண்கள் இந்தியன் பிரிமியர் லீக்) தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 207 ரன்களை குவித்துள்ளது.
டபிள்யூபிஎல் தொடர் இன்று தொடங்கியுள்ளது. தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் யாஸ்டிகா 1 ரன் ஆட்டமிழக்கம், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹெயிலே 3 பவுண்டரி, 4 சிக்சர்களை பறக்கவிட்டு 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் நட்சித்திர ஆட்டக்காரர் ஹர்மன்பிரீத் கௌர் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து 7 பவுண்டரிகளை அடித்தார். மொத்தமாக 30 பந்துகளில் 14 பவுண்டரிகளை விளாசிய அவர், 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்களை இழந்து 207 ரன்கள் குவித்துள்ளது. 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள குஜராத் அணிக்கு தொடக்கமே சரியில்லை.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அணியின் கேப்டன் பெத் மூனே பேட்டிங்கின் போது காயம் ஏற்பட்டு, ஆட்டத்திலிருந்து (ரிட்டையர்டு விக்கெட்) ஓய்வு பெற்றார். அவரின் விக்கெட்டை தொடர்ந்து அணியின் மற்ற வீராங்கனைகளும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதுவரை எந்த ஒரு வீராங்கனையும் இரு இலக்கத்தில் ரன் எடுக்கவில்லை.
மூன்று வீரர்கள் டக்-அவுட் ஆகியுள்ளனர். தற்போதுவரை குஜராத் அணி 9 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 24 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
English Summary
WPL MI vs Gu beth mooney injury