#WPL | 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை! 2008 ஐபிஎல் முதல் ஆட்டம் போலவே நடந்த சம்பவம்! - Seithipunal
Seithipunal


டபிள்யூபிஎல் (பெண்கள் பிரிமியர் லீக்) தொடர் இன்று தொடங்கியுள்ளது. தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.


 
அதன்படி களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் யாஸ்டிகா 1 ரன் ஆட்டமிழக்கம், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹெயிலே 3 பவுண்டரி, 4 சிக்சர்களை பறக்கவிட்டு 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அடுத்து களமிறங்கிய நட்சித்திர ஆட்டக்காரர், அணியின் கேப்டன்  ஹர்மன்பிரீத் கௌர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும், தொடர்ந்து 7 பவுண்டரிகளை அடித்த அவர், மொத்தமாக 30 பந்துகளில் 14 பவுண்டரிகளை விளாசி, 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்களை இழந்து 207 ரன்கள் குவித்தது. 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள குஜராத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிதான். 

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அணியின் கேப்டன் பெத் மூனே பேட்டிங்கின் போது காயம் ஏற்பட்டு, ஆட்டத்திலிருந்து (ரிட்டையர்டு விக்கெட்) ஓய்வு பெற்றார். அவரின் விக்கெட்டை தொடர்ந்து அணியின் மற்ற வீராங்கனைகளும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

அணியின் 5 வீராங்கனைகள் ஒரு இலக்கத்தில் ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். மூன்று வீரர்கள் டக்-அவுட் ஆகினர். 15.1 ஓவர்களில் குஜராத் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 64 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம், ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான மும்பை இந்தின்ஸ் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் 2008 தொடரின் முதல் ஆட்டத்திலும் இதேபோல் கொல்கத்தா அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் விற்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WPL MI Vs GU match result


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->