மகளிர் ஐபிஎல்.. குஜராத்தை வீழ்த்திய மும்பைக்கு 5வது வெற்றி.. ஃப்ளேஆப் சுற்றுக்கு முன்னேற்றம்.! - Seithipunal
Seithipunal


குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று இரவு நடைபெற்ற 12வது லீக் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162  ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிய ஹார்மோன்ப்ரீத் கவுர் 51 ரன்கள் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 5 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மேலும், முதலாவது மகளிர் பிரிமியர் தொடரில் முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WPL Mumbai Indians won by 55 runs against Gujarat Giants


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->