4,4,4,4,4,4,4 தொடர்ந்து 7 ஃபோர்! அடித்து நொறுக்கிய கேப்டன் ஹர்மான்ப்ரீத் கௌர்! முதல் ஆட்டமே அதகளம்! - Seithipunal
Seithipunal


டபிள்யூபிஎல் (பெண்கள் பிரிமியர் லீக்) தொடரின் முதல் ஆட்டத்திலேயே மும்பை இந்தியன்ஸ் அணி 207 ரன்களை குவித்துள்ளது.

டபிள்யூபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
 
அதன்படி களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் யாஸ்டிகா 8 பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹெயிலே 3 பவுண்டரி, 4 சிக்சிர்களை பறக்கவிட்டு 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் நட்சித்திர ஆட்டக்காரர் ஹர்மன்பிரீத் கௌர் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதில், ஒரு ஓவரின் கடைசி 4 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசினார். அடுத்த ஓவரில் ஸ்ட்ரைக் கிடைத்த உடன் தொடர்ந்து 3 பவுண்டிரிகளை விளாசினார். இதன் மூலம் தொடர்ந்து 7 பவுண்டரிகளை அடித்து ஹர்மன்பிரீத் அசத்தினார். மொத்தமாக 30 பந்துகளில் 14 பவுண்டரிகளை விளாசிய அவர், 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அமலியா 26 பந்துகளில் 46 ரன்களும், நட் சேவியர் 23 ரன்களும் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்களை இழந்து 207 ரன்கள் குவித்துள்ளது.

208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள குஜராத் அணி தற்போதுவரை 5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 17 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WPL Mumbai vs Gujarat


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->