நான்காவது இடத்தில் எப்படி விளையாடனும் தெரியுமா?! ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்த விரக்தியில் பாடம் எடுத்த யுவராஜ் சிங்!  - Seithipunal
Seithipunal


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இன்று நடைபெற்று வரும் உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள்  மோதி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டி தேர்வு செய்து 199 ரன்கள் மட்டுமே எடுக்க, இந்தியா எளிதாக வெற்றி பெரும் என நினைத்தால், 2 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து பரிதாப நிலையில் இருந்தது. 

எளிய இலக்கு தானே இந்தியா எளிதாக வெற்றி பெறும் என நினைத்தவர்களுக்கு எல்லாம் தலையில் பேரிடியாக விழுந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன், கேப்டன் ரோஹித் ஷர்மா அடுத்தடுத்து டக் அவுட் ஆக, அடுத்து நான்காவது இடத்தில் ஆட வந்த ஸ்ரேயாஸ் அய்யர் நான் மட்டும் விதிவிலக்கா என்ன டக் அவுட் ஆகி வெளியேறினார். 

மூன்று பேருமே டக் அவுட் ஆக அண்ட் இரண்டு ரன்கள் எங்கிருந்து வந்தது என நீங்கள் கேட்கலாம், மறுமுனையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கோலியாலும் அந்த ரன்கள் எடுக்கப்படவில்லை. உதிரி வகையில் ஆஸ்திரேலியாவினால் கொடுக்கப்பட்டது. 

ரோஹித் ஷர்மாவுக்கு கொஞ்சம் கடினமான பந்து என்று சொன்னாலும், இஷான், ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்த விதத்தினை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆடுகளத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல் விளையாட இது 20 ஓவர் போட்டி அல்ல என யாராவது அவர்களிடம் சொல்வார்களா?!  என அனைவரும் கொதித்து எழுந்துவிட்டனர். 

மூன்று விக்கெட்டுகளை இழந்ததும் கோபமடைந்த இந்திய அணியின் முன்னால் வீரரும், நான்காவது இடத்தில் இந்தியாவிற்காக நீண்ட ஆண்டுகள் ஜொலித்தவருமான யுவராஜ் சிங், ஸ்ரேயாஸ் அய்யரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் தனனுடைய டுவிட்டர் பதிவில், 4வது பேட்ஸ்மேன் முதலில் ஆட்டத்திற்கான அழுத்தத்தை உள்வாங்க வேண்டும், தங்கள் இன்னிங்ஸை கட்டமைக்க முயற்சிக்கும் போது சிறப்பாக சிந்திக்க வேண்டும் ஷ்ரேயாஸ் ஐயர். பாகிஸ்தானுக்கு எதிராக 100 ரன்கள் எடுத்த பிறகும் 4வது இடத்தில் ராகுல் ஏன் பேட்டிங் செய்யவில்லை என்று எனக்கு புரியவில்லை. விராட் கோலி கேட்சை விடுவது என்பது ஆட்டத்தை இழப்பதற்கு சமம், அவருடைய கேட்சை விட்டதன் மூலம் ஆட்டம் தொடங்கியுள்ளது" என தெரிவித்திருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yuvraj singh advised sreyas iyer how to perform 4th position


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->