மிக அபாயகரமான பந்து வீச்சாளர்! நீங்க தான் உண்மையான ஜாம்பவான்! பிராட்டுக்காக மனம் உருகிய யுவராஜ்சிங்! - Seithipunal
Seithipunal


டெஸ்ட் கிரிக்கெட்டின் அபாயகரமான பந்துவீச்சாளர்களில் ஒருவரான இங்கிலாந்து அணியை சேர்ந்த ஸ்ட்டுவர்ட் பிராட் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

கிரிக்கெட்டை பொறுத்தவரை 2007 ஆம் ஆண்டு இந்தியர்களால் மறக்க முடியாத ஒரு ஆண்டு. ஆனால், ஸ்ட்டுவர்ட் பிராட்யை கேட்டால், அந்த ஆண்டு தனது வாழ்வின் மிக வேதனையான ஆண்டு என்று சொல்வார்.

இந்த இரண்டுக்கும் என்ன சம்மந்தம் என்பதை 80ஸ், 90ஸ் களில் பிறந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்திருப்பார்கள். 

அப்படி என்ன தான் நடந்தது அந்த ஆண்டு? 

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியில் பிராட் இடம்பெற்றிருந்தார்.

இந்த தொடரின் இறுதி ஆட்டம் எவ்வளவு பேசப்படுகிறோதோ, அதே அளவு குரூப் ஆட்டங்களில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதிய அந்த ஆட்டம் வரலாற்றில் முக்கியத்துவமானது. 

ஆம், அதுவரை கிரிக்கெட் உலகம் காணாத ஒரு அதிரடி ஆட்டம், இல்லை இல்லை வெறிபிடித்த ஆட்டத்தை பார்த்தது. 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் காம்பிர் - ஷேவாக் நல்ல அடித்தளத்தையிட்டு ஆட்டமிழந்தனர்.

ஆட்டத்தின் 18 ஓவரின் இறுதியில் இந்திய வீரர் யுவராஜ் சிங்-ர்க்கும், இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரோ பிளின்டாஃப்க்கும் இடையே அனல் பறக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பிளின்டாஃப் மீதான மொத்த கோபத்தையும், அடுத்து 19 வது ஓவர் வீசிய ஸ்டூவர்ட் பிராட் மீது இடியாய் இறக்கினர் யுவராஜ் சிங்.

பிராட் வீசிய ஆறு பந்துகளும் சிக்சருக்கு பறந்தன. அதுவரை கிரிக்கெட் உலகம் காணாத அதிசியம் அன்றுதான் நிகழ்ந்தது. 12 பந்துகளில் அரைசதம் கண்ட யுவராஜ் அடுத்த ஓவரில் பிளின்டாஃப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

யுவராஜ் சிங்கின் இந்த சாதனை உலகம் முழுவதும் பேசப்பட்ட அதே நேரத்தில், ஸ்ட்டுவர்ட் பிராட் கேரியர் அவ்வளவுதான் முடிந்தது என்ற விமர்சனமும் எழுந்தது.

கிரிக்கெட் என்றால் என்ன என்று தெரியாதவர் கூட பிராட்யை கிண்டல் செய்தனர். யுவராஜ் சிங்கின் ஆட்டத்தால் பல நாட்கள் தூக்கம் இல்லாமல் தவித்ததாக பிராட் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

அந்த 2007 ஆம் ஆண்டுக்கு பின் மீண்டு வந்த பிராட், இங்கிலாந்து அணிக்கு மட்டுமல்ல, டெஸ்ட் கிரிக்கெட்டின் அபாயகர பந்து வீச்சாளர்களில் ஒருவராக தன்னை தானே செதுக்கி முத்திரை பதித்துள்ளார்.

ஏற்கனவே, ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து அறிவிக்கப்படாத ஓய்வில் இருந்த பிராட், தன்னுடைய முழு கவனத்தையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் செலுத்தி மொத்தம் 600 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் பிராட். மேலும், ஒரு நாள் ஆட்டங்களில் 178 விக்கெட்களையும், டி20 ஆட்டங்களில் 65 விக்கட்டுகளையும் எடுத்துள்ளார்.

இந்த நிலையில், டெஸ்ட் உள்பட அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பிராட் திடீரென அறிவித்துள்ளார். அவரின் ஓய்வு முடிவுக்கு பல்வேறு நட்டு வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிராட்டின் பலநாள் தூக்கத்தை கெடுத்த இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அவருக்கு புகழாரம் சூட்டி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

அதில், "ஸ்டூவர்ட் பிராட் மிகசிறந்த, மிக அபாரமான பந்து வீச்சாளர்களில் ஒருவர். உண்மையான ஜாம்பவான் நீங்கள். உங்கள் பயணமும், உறுதியும் மற்ற இளம் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும்" என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Yuvraj Singh wish Stuart Broad Retirement 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->