மொத்தம் 14 சிக்ஸ், 20 ஃபோர்! ஜிம்பாப்வேவை கதற கதற வெளுத்து வாங்கிய இந்திய வீரர்கள்!
ZIM v IND t20
இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து ஆடி வருகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் சுப்மன் கில் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க, அபிஷே ஷர்மாவுடன் கைகோர்த்த ருத்ராஜ் கெய்க்வாட் அசத்தலான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில், ஆரம்பத்தில் சற்று நிதானமாக ஆடிய அபிஷேக் சர்மா 33 பந்துகளில் அரை சதம் கடந்தார். பின்னர், ஐபிஎல் அனுபவத்துடன் வந்த மலை, போன கயிறு என்று காட்டு அடி அடிக்க, அடுத்த 12 பந்துகளில் 100 ரன்களை எட்டினார். 46 பந்துகளில் 8 சிச்கர்கள், 7 பவுண்டரியுடன் தனது முதல் சதமடித்து அவுட்டானார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ருத்ராஜ் கெய்க்வாட் ஆரம்பத்தில் அபிஷேக் சர்மாவுக்கு துணையாக விளையாடினார். அவர் விக்கெட் ஆன பிறகு, தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார்.
இறுதிவரை ஆட்டம் இழக்காத ருத்ராஜ் கெய்க்வாட், 47 பந்துகளில், 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உட்பட 77 ரன்கள் குவித்தார். அவருடன் கைகோர்த்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் ஆடிய ரிங்கு சிங் 22 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்கள் உட்பட 48 ரன்கள் குவித்தார்.
ஆட்டத்தின் கடைசி ஓவரின், கடைசி இரு பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை அடித்து, ஐபிஎல் தொடரை போலவே நான் சர்வதேச தொடரிலும் சிறந்த பினிஷராக இருப்பேன் என்பதை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
இறுதியில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்துள்ளது. 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கி ஆடி வருகிறது.
ஜிம்பாவே அணிக்கு எதிரான இந்த டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. மேலும் ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரர்களாக அறியப்பட்டு, சர்வதேசப் போட்டிகள் அறிமுகமான வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து அதிர்ச்சி கொடுத்திருந்த நிலையில், இந்த இரண்டாவது டி20 ஆட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பது இந்திய ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.