அரியலூருக்கு வரப்போகும் 10 எண்ணெய் கிணறுகள்! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி கிணறுகளை அமைக்க கடந்த ஜூன் 15ம் தேதி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளது. அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி அதன் விவரங்களை தெரிவிக்க வேண்டும். காவிரி ஆற்றிலிருந்து கிணறு அமைவிடம் இடைப்பட்ட தூரம் குறித்த விவரங்களை வழங்க வேண்டும் என பதில் கடிதம் அனுப்பி இருந்தது.

இந்த எண்ணெய் கிணறுகள் அரியலூர் மாவட்டத்தில் மீன்சுருட்டி அருகே உள்ள காட்டகரம் பகுதியில் 2 கிணறு, குண்டவெளி பகுதியில் 3 கிணறு, முத்துசேர்வமடம் பகுதியில் 4 கிணறு, குறுங்குடியில் 1 கிணறு என மொத்தம் 10 எண்ணெய் உற்பத்தி கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் காட்டகரம் கிராமத்தில் பாண்டியன் ஏரி மூலம் பாசனம் பெறும் 500 ஏக்கர் நெற்பயிர்கள் மற்றும் இகர கிராமங்களில் மக்காச்சோளம், கடலை, முந்திரி, கரும்பு ஆகியவற்றை பயிரிட்டு வருகின்றனர். இந்த திட்டம் வருவது அந்த பகுதி மக்களுக்கே தெரியாது என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும்.

ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி வழங்கினால் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அக்கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எண்ணெய் கிணறு அமைந்தால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10 ongc oil wells coming up in Ariyalur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->