#சென்னை || கட்டுமான அனுமதி கட்டணம் 100% உயர்வு!!
100 persentage building permission fee increasing in Chennai
சென்னை மாநகராட்சி கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் கட்டிடம் கட்ட அனுமதி பெற மற்றும் கட்டிடங்கள் இடிப்பதற்கான கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் சென்னை மாநகராட்சி கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்ட அனுமதி கட்டணம் 100% உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போன்று கிணறு, குடிநீர் தொட்டி, சுற்றுச்சுவருக்கான அனுமதி கட்டணம் இரு மடங்காக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பழைய கட்டிடங்கள் இடிப்பதற்கான அனுமதி கட்டணமும் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏற்கனவே திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து சொத்து வரி, மின்கட்டணம், பத்திரப்பதிவு, முத்திரை தாள் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும், பழைய கட்டிடங்கள் இடிப்பதற்கும் அனுமதி பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது சென்னை மக்களை அதிர்ச்சியின் ஆழ்த்தியுள்ளது.
English Summary
100 persentage building permission fee increasing in Chennai