நீச்சல் குளத்தில் இடைவிடாது சிலம்பம் சுற்றி.. 11 வயது தமிழக சிறுவன் உலக சாதனை.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டம் சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தன ராஜா ராஜேஸ்வரி தம்பதியினருக்கு 11 வயதில் ராஜமுனீஸ்வர் என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த சிறுவன் கடந்த சில ஆண்டுகளாக தனியார் விளையாட்டு அகாடமியில் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை பயின்று வருகிறார். இதில் நீச்சலிலும் அதிக ஆர்வம் உள்ளதை அறிந்த சிறுவனின் பயிற்சியாளர் நீச்சல் அகாடமியில் சேர்த்து சிறுவனுக்கு நீச்சல் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இதனிடையே சிறுவன் புதிய சாதனையை படைப்பதற்கு நீரில் சிலம்பம் சுற்றுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனையடுத்து முறையாக பயிற்சிகளை கற்றுக் கொண்ட சிறுவன் நீச்சல் குளத்தில் 2 மணி நேரம் இடைவிடாது தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார்.

இதனையடுத்து இந்த சாதனையை 'Nobel World Record Achiver' அங்கீகரித்துள்ளது. தற்போது சிறுவனின் சாதனையை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 years old boy world record in swimming pool silambam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->