உதகையில் 124வது மலர்க் கண்காட்சி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைப்பு.!
124th flower show
இந்தியாவில் உள்ள மலை வாசஸ்தலங்களில் நீலகிரி மாவட்டம் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நிலவும் மிதமான காலநிலை மற்றும் இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதி மற்றும் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படும். இதன் ஒரு பகுதியாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக காரணமாக, ஆன்லைன் வாயிலாக கண்காட்சி நடந்தது. மக்கள் வீட்டில் இருந்தபடியே தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வண்ண செடிகள் கண்டு ரசித்தார்கள். தற்போது முழுமையாக கொரோனா தொற்று குறைந்த சுற்றுலா பயணிகளின் வருகையும், கடந்த சில மாதங்களாக அதிகரித்து வண்ணம் உள்ளது.
இதையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சி இன்று முதல் வருகிற 24-ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் அவர் மலர் மாடங்களை பார்வையிடுகிறார்.