12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் சிறப்பு வகுப்புகள்.!
12th supplementary exam coaching from today
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கான 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் சும்மா 47 ஆயிரம் மாணவர்கள் தோல்வியடைந்தனர்.
மேலும் சில ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இந்த நிலையில் மாணவர்களுக்கான உடனடி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களையும், தேர்வுக்கு வராத மாணவர்களையும் கண்டறிந்து உடனடித் தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் இன்று முதல் அந்தந்தப் பள்ளிகளிலேயே எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் இன்று முதல் தோல்வியடைந்த மாணவர்களுக்கு அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மேற்கொள்ளவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
English Summary
12th supplementary exam coaching from today