ப்ளஸ்2 பொதுத்தேர்தவில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி!  - Seithipunal
Seithipunal


பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை எழுதிய சுமார் 8.50 லட்சம் மாணவ-மாணவியர்களில், 7,55,451 (94.03%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இதில், மாணவியர் : 96.38% பேரும், மாணவர்கள்: 91.45% பேரும், சிறைவாசிகள் : 79 பேரும், மூன்றாம் பாலினத்தவர் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், திண்டுக்கல்லை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் பெற்றுள்ளார். 

அதிக அளவில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக அதிக அளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் 87.30 சதவீத தேர்ச்சி பெற்ற ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

தமிழ் பாடத்தில் இரண்டு பேர் மட்டுமே 100த்துக்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மேலும், ஆங்கில பாடத்தில் 15 பேரும்,
இயற்பியல் பாடத்தில் 812 பேரும்.
வேதியல் பாடத்தில் 3909 பேரும்,
உயிரியல் பாடத்தில் 1494 பேரும். 
கணிதத்தில் 690 பேரும், தாவரவியல் படத்தில் 340 பேரும், விலங்கியல் 154, கணித அறிவியல் 4618,  வணிகவியல் 5678, கணக்குப்பதிவியல் 6573, பொருளியல் 1760, கணித பயன்பாடுகள் 4051, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் 1334 பேரும் 100த்துக்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12thResults School Exam Dindigul Sudent new record


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->