கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் 13வது நபர் கைது! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு மூலையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கானது சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் 11 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய 12 வது நபராக முகமது இத்ரீஸ் என்பவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் 13 வது நபராக அசாருதீன் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அசாருதீன் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13th person arrested in Coimbatore car blast case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->