தமிழகத்தை மிரளவிட்ட கள்ளச்சாராய வழக்கு - இதுவரை 14 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள, கருணாபுரம் கிராமத்தில் விஷ சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, அவரது சகோதரர் தமோதரன் மற்றும் இவரது மனைவி சந்திரா ஆகியோரை கடந்த இரு தினங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து சிபிசிஐடி போலீசார் கள்ளச்சாராய வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரை பண்ருட்டி அருகே கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மெத்தனால் விற்பனையில் தொடர்புடைய சங்கராபுரம் அரியூரைச் சேர்ந்த ஜோசப்ராஜா, லூர்துசாமி, சூசைநாதன், மாதவச்சேரி ராமர், மரக்காணத்தைச் சேர்ந்த மதன்குமார், கடலூர் மாவட்டம் தம்பிப்பேட்டையைச் சேர்ந்த ராஜா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், கள்ளச்சாராய வழக்கில் சிறைக்கு சென்று வெளிவந்த மாதேஷுக்கு மெத்தனால் வாங்க ஜிஎஸ்டி பில் அளித்து உதவியதாக பண்ருட்டியில் சிப்ஸ் கடை நடத்திவந்த சக்திவேல், மீன் வியபாரி கண்ணன் மற்றும் சேலம் மாவட்டம் கருமந்துறை கல்லாநத்தம் சங்கர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து, விருத்தாசலம் செராமிக் தொழிற்சாலை பிரிவில் அகல்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்திவரும் ஜோதிமணி மற்றும் கேசவகுமார் உள்ளிட்ட இருவரும் கள்ளச்சாராயத்தில் கலக்க பயன்படுத்தும் வேதிப்பொருளை மாதேஷூக்கு வழங்கியதாக வழக்குப் பதிவுசெய்து செய்து சிறையில் அடைத்தனர். இந்த கள்ளச்சாராய வழக்கில் தற்போது வரை 14 கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

14 peoples arrest kallasarayam issue in kallakurichi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->