சென்னையில் பரபரப்பு : கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய 14 வயது சிறுவன்.. 3 பேர் காயம்.. 5 வாகனங்கள் சேதம்..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் பரபரப்பான ஜாம்பஜார் பகுதியில் 14 வயதான சிறுவன் கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஜாம்பஜார் பகுதியில் உள்ள நெரிசல் மிகுந்த பாரதி சாலையில் இன்று மாலை 6 மணியளவில், திடீரென ஒரு கார் அதிவேகமாக வந்துள்ளது. அப்போது அந்தப் பகுதியில் இருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் பொது மக்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது. 

இதையறிந்த ஜாம்பஜார் போலீஸ் உடனடியாக விபத்து ஏற்படுத்திய அந்த காரை சுமார் 1 கி. மீ தூரம் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். அப்போது காரில் இருந்த ஓட்டுனரைப் பார்த்து போலீசார் அதிர்ந்துள்ளனர். காரணம் காரின் ஓட்டுநர் இருக்கையில் இருந்தது 14 வயதேயான சிறுவன். இவர் 9ம் வகுப்பு படித்து வருவதாகவும், தனது பெரியப்பாவின் காரை எடுத்துக் கொண்டு உடன் படிக்கும் வகுப்புத் தோழருடன் காரில் வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து ஜாம்பஜார் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அண்ணா சதுக்கம் புலனாய்வுப் பிரிவு போலீசார் காரில் இருந்த இரண்டு சிறுவர்களிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இதனிடையே சென்னையில் உள்ள பரபரப்பான பகுதிகளில் ஒன்றான ஜாம்பஜார் பகுதியில், நெருக்கடி மிகுந்த பாரதி சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் 3க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளதோடு, 5க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்த விபத்து  சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 Year Old Boy Driven a Car And Caused a Accident in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->