தீபாவளி பண்டிகை - தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு.! - Seithipunal
Seithipunal


தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பிற ஊர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகின்ற 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து மட்டும் 10,500 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக வருகிற 19-ம் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்திற்கு பின்னர் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

வெளியூர்களில் இருந்து சுமார் 5.5 லட்சம் மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கான பணிகளை திட்டமிட இருப்பதாகவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய www.tnstc.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும், TNPSC என்ற மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். தற்போது தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16500 special bus run in tamilnadu for deepawali festival


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->