17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது.!
17 years old girl get baby chithappa arrested
17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதில், சிறுமி தனது சித்தப்பா உடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை அவரது சித்தப்பா பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி இருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து பலமுறை சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து இதுகுறித்த புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சட்டத்தின் கீழ் சிறுமியின் சித்தப்பாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 10000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
17 years old girl get baby chithappa arrested