வெல்டிங் கடை உரிமையாளர் கொடூரமாக கொலை.! 2 பேர் கைது
2 people arrested for murder of the welding shop owner in tirunelveli
திருநெல்வேலி மாவட்டத்தில் வெல்டிங் கடை உரிமையாளரை கொடூரமாக குத்திக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சிதம்பரபுரம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பழனிமுருகன்(48). இவர் வெல்டிங் கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தயாநிதிக்கும் அவரது மகன் செல்வராஜிக்குமிடையே நிலப்பிரச்சினை இருந்துள்ளது.
இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் இவர்களிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், பழனி முருகன் இருவரையும் சமாதானம் செய்து வைத்தார். மேலும் அப்பொழுது செல்வராஜை பழனி முருகன் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் பழனி முருகன் மீது ஆத்திரமடைந்த செல்வராஜ், நேற்று இரவு அவரது தம்பி சௌந்தரராஜனுடன் சேர்ந்து பழனி முருகனை கொடூரமாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில் பழனி முருகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த களக்காடு போலீசார் பழனி முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பழனி முருகனை கொடூரமாக கொலை செய்த செல்வராஜ் மற்றும் சௌந்தரராஜ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.
English Summary
2 people arrested for murder of the welding shop owner in tirunelveli