"வீலிங் சாகசம்" செய்தபோது பரிதாபம்..! மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 2 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் வீலிங் சாகசம் செய்தபோது 2 மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி பகுதியை சேர்ந்த சபரி (20), தவ்பிக் கான் (25) மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீஹர்ஷா(27) மற்றும் சில நண்பர்கள் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் ஓசூருக்கு வந்துள்ளனர். அப்பொழுது ஓசூரில்-கிருஷ்ணகிரி சாலையில் மூன்று சக்கரத்தை மேலே தூக்கி வீலிங் சாகசம் செய்தபடி மோட்டார் சைக்கிளை ஓட்டியுள்ளனர்.

இதில் அதிவேகமாக சென்று வீலிங் செய்ததில், பந்தாரபள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே சபரி மற்றும் ஸ்ரீஹர்ஷா ஆகிய இரண்டு பேரும் உயிரிழந்தனர். மேலும் தவ்ஹீத் கான் பலத்த காயமடைந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 people who had a motorcycle wheeling adventure died in kirishnagiri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->