திமுக ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது! - Seithipunal
Seithipunal


2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திமுக ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு, 5 பேர் கொண்ட திமுக ஒருங்கிணைப்பு குழுவை, அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அமைத்துள்ளார். 

திமுகவின் இந்த ஒருங்கிணைப்பு குழுவில் திமுகவின் முதன்மை செயலாளர் கேஎன் நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி, திமுக அமைச்சர்கள் ஏவ வேலு, தங்கம் தென்னரசு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் திமுகவின் இந்த தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் தொடக்கி நடந்து வருகிறது.

சுமார் ஆறு மணி அளவில் இந்த ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு, உதயநிதி உள்ளிட்ட ஐந்து பேரும்அண்ணா அறிவாலயத்தில் ஒன்று கூடி சட்டமன்றத் தேர்தலில் எப்படி எதிர்கொள்வது, இப்போது செய்யக்கூடிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கியமாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவில் ஏதேனும் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டுமா? குறிப்பாக அமைப்பு ரீதியான மறுசீரமைப்பை செய்ய வேண்டுமா? என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் திமுக தலைவருக்கு தேர்தல் குறித்து சில பரிந்துரைகளை வழங்குவது குறித்தும், கட்சி நிர்வாகிகளிடமிருந்து வருகின்ற புகார்களை விசாரிப்பது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2026 Election DMK first meet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->