துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2.2 கிலோ தங்கம் பறிமுதல்!
2.2 kg gold smuggled from Dubai to Chennai seized
துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை சுங்கச் சோதனையில் இல்லாமல் வெளியில் எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்ட விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 2 நபரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தங்கத்தை துபாயிலிருந்து கடத்தி வந்த டிரான்சிட் பயணி இலங்கைக்கு தப்பி சென்றார். இந்த சம்பம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை நிகழ்த்தி உள்ளது. மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு துபாயிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்திக் கொண்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்து துபாய், அபுதாபி மற்றும் சார்ஜா உள்ளிட்ட விமானத்தில் பயணித்துவரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்களாக அங்கு பணியில் இருக்கும் தீபக் (30) உள்பட 2 ஊழியர்கள், கழிவறைகளை சுத்தம் செய்யம் கருவிகளை டிராலி டைப் இயந்திரத்தில் வைத்து தள்ளி வந்தனர். அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் இருவரையும் நிறுத்தி விசாரித்தனர்.
இதனை தொடர்ந்து, கழிவறைகளை சுத்தம் செய்யும் கருவிகளை சோதனையிட்டனர். அதற்குள் 3 சிறிய பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அவைகள் என்னவென்று பிரித்து பார்க்கையில் , 2.2 கிலோ தங்க பசை இருந்ததுள்ளது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.5 கோடி ஆகும் .இதனையடுத்து, ஒப்பந்த ஊழியர்கள் தீபக் உள்பட இருவரையும் அதிகாரிகள் கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், துபாயிலிருந்து இலங்கை செல்லும் டிரான்சிட் பயணி ஒருவர், தங்கப்பசை அடங்கிய பார்சல்களை கடத்திக் கொண்டு வந்து, சென்னை விமான நிலைய கழிவறை தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்துவிட்டு, மற்றொரு விமானத்தில் இலங்கைக்கு சென்றுள்ளது தெரியவந்தது.
அந்த பயணி ஏற்கனவே, சென்னை விமான நிலைய ஒப்பந்த ஊழியர் தீபக்கிடம், மறைத்து வைத்து இருந்த தகவலை கூறியிருந்ததால் அவர் தனது காலை பணி நேரத்தை இரவு பணி நேரமாக மாற்றி கேட்டு, பணிக்கு முன்னதாகவே வந்து, அந்த கழிவறையில் இருந்த தங்கப் பசை பார்சல்களை எடுத்து, சுங்கச் சோதனை இல்லாமல் சுத்தம் செய்யும் கருவிகளில் ஒளித்து வைத்து கொண்டு வெளியில் எடுத்துச்செல்ல முயன்ற போது பிடிபட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
English Summary
2.2 kg gold smuggled from Dubai to Chennai seized